சட்டவியல்
⚖️

படுக்கையறையில் அரசு கேமரா?

உங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் படுக்கையறையில் அரசு ஒரு கேமராவை வைத்து, அதன் ரிமோட்டைத் தன் கையில் வைத்துக்கொண்டால் சம்மதிப்பீர்களா? புதிய குற்றவியல் சட்டங்களான BNS, BNSS, BSA இதைத்தான் சத்தமில்லாமல் செய்கின்றன!

சட்டவியல்
⚖️

தேசத்துரோகம் நீக்கம் ஒரு மாயையா?

BNS சட்டத்தில் 'தேசத்துரோகம்' நீக்கப்பட்டது போலத் தெரிந்தாலும், 'இறையாண்மைக்கு குந்தகம்' என்ற பெயரில் வலை விரிவாகப்பட்டுள்ளது. அரசை விமர்சிக்கும் ஒரு சாமானியன் கூட இதில் எளிதாகச் சிக்கி குற்றவாளியாகலாம்.

சட்டவியல்
⚖️

14 நாட்கள் இருட்டில் நீதி!

BNSS விதிகளின்படி புகாரளித்தவுடன் FIR பதிவு செய்யாமல் 14 நாட்கள் வரை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது கட்டப்பஞ்சாயத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது போன்றதாகும்.

சட்டவியல்
⚖️

உங்கள் பாஸ்வேர்டு, உங்களின் சாட்சியம்!

BSA சட்டத்தின்படி உங்கள் போன் அல்லது லேப்டாப் பாஸ்வேர்டை மிரட்டி வாங்குவது சாதாரணமாகிவிட்டது. இது ஒருவரை அவருக்கு எதிராகவே சாட்சியம் அளிக்கக் கட்டாயப்படுத்தும் கொடூரமான அரசியலமைப்பு மீறலாகும்.

சட்டவியல்
⚖️

அதிகாரம் நிரந்தரமற்றது!

இன்று ஆளுங்கட்சிக்குச் சாதகமாக உள்ள இந்த அதிகாரக் குவிப்பு, நாளை கைமாறும் போது அவர்களையே பதம் பார்க்கலாம். சட்டம் மக்களைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்க வேண்டுமே தவிர, அரசைப் பாதுகாக்கும் ஆயுதமாக மாறக்கூடாது!

முழுமையான சட்ட விளக்கத்தைப் படிக்க